Thursday, December 29, 2011

தாசிகா..


சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீ ரகவேந்திரா மண்டபத்தில் அண்ணா ஹசரே ஆதரவாளர்கள் தொடர் மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதில் அண்ணா ஹசரேவிற்கு ஆதரவு தெரிவித்த மூன்று வயது இளம் குழந்தை தாசிகா..
மூன்று வயதே நிரம்பி இருந்தாலும்., ஏதோ பத்து வயது பிள்ளையை போல் பேச்சு, நடை, முக பாவனைகள். இந்தியா சிந்தாபாத், பாரத் மாதாக்கி ஜே, வந்தே மாத்தரம் என்று அனைத்தையும் மிக சரியான உச்சரிப்பில் பிழையின்றி கூறுகிறாள். இன்று அனைத்து கேமராக்களும் அவளையே வட்டமிட்டு சுற்றி திரிந்தது.. இவளுக்கு இந்த வயதில் ஏன் இந்த ஆர்வம் என்று அவளின் பாட்டியிடம் வினவினேன்?., "அவளின் தாத்தா இது போன்ற சமுக முயற்ச்சிகளில் ஈடுபடுவார். இவளையும் சிறு வயதில் இருந்து இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உடன் அழைத்து செல்வார். அங்கு இது போன்ற வசனங்களை கேட்டு பழகிக் கொண்டாள்.. டி.வியிலும் சமுக நிகழ்ச்சிகளையே அவளின் தாத்தா பார்ப்பார் அவளும் அதையே பார்ப்பாள்" என்றார்.. தாத்தாவின் பழக்கம் இவளுடன் இனைந்து விட்டது. தந்தைக்கும் மகனுக்கும் இருக்ககூடிய தலைமுறை இடைவேளி() தாத்தாவிற்கும் பேரனுக்கும் இருக்காது என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.