Sunday, January 1, 2012

யாழ்ப்பாண நண்பர்களுடன் பயணம்



சேலம் பெரியார் பல்கலைக் கழகம் . . . .

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொப்டர்பியல் துறையின் சார்பில் ஊடவியல் மணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மீடிய ரிசர்ச் ட்ரைனிங்க் சென்டர் பிரிவில் பயிலும் மாணவர்களும், சென்னை பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுன் மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர். முத்துச் செழியன் தொடங்கி வைத்து சிறப்புறை வழங்கினார். அதில் அவர் தனது தாத்தா மற்றும் அப்பா யாழ்பாணத்தில் வசித்தவர்கள் டீ எஸ்டேடில் பணிபுரிந்த காலத்தில் அப்பாவிற்க்கு வேலை கிடைத்து இந்தியா வந்தோம் என்றார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒன்று 1940 பிறகு தான் வந்தது. ஆனால் இன்று அதன் வளர்ச்சி" என்று அவருடைய கண்களை விரித்துக்காட்டினார். தொழில்நுட்பம் காரணமாக இந்த வளர்ச்சியை சுட்டிக்காட்ட முடியாது என்றார்.

மாற்று ஊடகங்கல் என்ற தலைப்பில் பேசிய பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவரான திரு. நடராசன் அவர்கள்பத்திரிக்கை துறையில் தொழில் சார்ந்த யுத்திகளை கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த செதிகளை மற்ற பத்திரிக்கைகளில் வெளியிடப்படவில்ல்லை நாங்கள் தாமிரபரனி என்னும் நாளேட்டை ஆரம்பித்தோம். செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக இருந்த குடும்பங்களையும் மற்றும் குழந்தை தொழிளாலர்களையும் மீட்டெடுத்தோம். வருடத்துக்கு 27 கொத்தடிமை பிள்ளைகளை காப்பாற்றினோம். அதே போல் இன்றைய நிலங்க்களின் நிலை 500 அடி தோண்டினாலும் நீர் இல்லாத வண்ணம் நிலத்தின் வளம் மாசுபட்டுள்ளது. இதை தமிழ் நாடு அரசு வரச்சி நிலமாக அறிவித்துவிட்டது. இதை தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதுநிலை செய்தியாளர் திரு ராஜசெகர் ஊரகச் செய்திகள் என்ற தலைப்பில் தன்னுடைய கருத்தினை பகிர்ந்து கொண்டார். அவரி தொடர்ந்து டைம் ஆப் இந்தியா நாளெட்டின் புகைப்படகாரர் திரு சுதாகரன் அவர்கள் அவருடைய புகைப்படங்களின் வழியில் அவர் உணர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மதிய உணவிற்கு பிறகு சேலம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு. கதிரவன் " ஊரகச் செய்திகளில் பருவ இதழ்கள் என்ற தலைபில் கருதுக்களை வழங்கினார்.
இருதியாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.டி.சி பிரிவின் ஒருங்கினைப்பாளரான திரு. தேவானந் அவர்கள் நன்றியுரை வழங்க்கினார். விழாவின் இறுதியில் சென்னை பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துரையை சார்ந்த மாணவர்கள் கிராமிய நடனங்களான ஒயிலாட்டம், பறையாட்டம், சாட்டை குக்சியாட்டம் நிகழ்த்தப்பட்டது. பெரியார் பல்கைலைக் கழகத்தின் மாணவர்கள், சேலம் பத்திரிக்கையாளர் மன்ற உருப்பினர்கள் அனைவரும் தன்னை மறந்து ஆட ஆரம்பித்தனர். அன்று இரவு சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினோம்.

இரவு பயணம் கர்னாடக எல்லையை இரவு 1.30 மணி அளவில் நுழைந்தோம். கர்னாடகம் எங்களை அன்பு மழையால் வரவேற்றது. அதன் பின் அன்று இரவு தியான மண்டபத்தில் தங்கினோம். புதிய இடம் பேச கூடாது என்று இல்லை மேன்மையான குரலில் மற்றவர்களுக்கு இடையூரு இல்லாத வண்ணம் பேச வேண்டும். ஒரு விதமான புதிய அனுபவம். என்னை எனக்கே புதியவளாக அறிமுகப்படுத்தியது.. அங்கிருந்த பாதரியார் என்னை சற்று பிரமிக்க வைத்தார். அழகான குருகிய புன்னகை, மென்மையான பேச்சு, பல பலக்கும் முகப் பொலிவு அவரை பார்த்தாலே கைகூப்பி கும்பிட வத்தது அவர் தோற்றம். அன்று இரவு அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் ரகசிய குரலில் பேசினேன். அவர் புன்னகைத்துவிட்டு உனது சொந்த குரலில் மென்மையாக பேசுமா., பேச கூடாது என்று இல்லை உனது பேச்சின் சப்தம் மற்றவர்களை இடயூராக இருக்க கூடாது" என்றார். Good night father என்று கூறி விட்டு உறங்கச் சென்றேன்
மறுநாள் காலை விடிந்தது., அழகான பனி படர்ந்த இடங்கள். காலை உணவு முடித்தவுடன் அவர்களின் தட்டுகளை அவர்களாகவே சுத்தப்படுத்த வேண்டும். பெண்களுக்கு இது பழக்கமான விடயம் ஆனால் ஆண்களுக்கு புதிதானது வித்தியாசமான ஒரு அனுபவம்.

அன்று பெங்களூர் மியூசியம் பயணமானோம்......

முழுக்க முழுக்க அறிவியல் வேலைபாடுகள் நிறைந்த ஒரு இடம். அதில் எனக்கு பிடித்தது லாஜிக் கேட். ஒரு பந்து அந்த அரங்கம் முழுக்க சுற்றி திறிந்து ஆரம்பித்த இடத்திற்கே வந்தடைகிறது.. சிறு சிறு என்ஜிங்களின் வேலைபாடுகள் என அனைத்தையும் கண்டோம். என்னுடன் வந்த சக மாணவன் தமிழ்ச்செல்வன் அனைத்து என்ஜிங்களை பற்றி விவரித்தான்.. சிறு பொறாமை ஏற்பட்டது மிக நுனுக்கமாக விவரித்தான்.

 அன்று மாலை பெங்களூர் தமிழ் சங்கம் சென்றோம். தமிழின் தொண்மை பற்றியும், இப்பொழுது தமிழின் நிலையை பற்றியும் தமிழ் சங்கத்தின் தலைவர் பேசினார். முற்றம் குழுவினரின் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு தியான மண்டபம் விரைந்தோம். அதே அமைதி இரண்டாவது நாள் எனக்கு பழகிப்போனது. அன்று இரவில் என்னுடன் வந்த சக மாணவிகளுடன் தங்கினோம். மறுநாள் தீபாவளி என்பதால் கையில் மருதாணி கோலம் போட்டு கொண்டிருந்தோம். சற்று மனதில் பயம் ஏற்பட்டதால் விபூதி இட்டு கொண்டோம், பைத்தியகாரதனமாக தோன்றினாலும் எங்களின் சூழ்நிலை அப்படி செய்ய வைத்தது.

மறுநாள் மைசூர் பயணம்..

மறுநாள் மைசூர் செல்ல வேகமாக கிளம்பினோம். பெங்களூரில் எங்களுக்கு தங்க அனுமதி கொடுத்த பாதரியார் அவர்களுக்கு நன்றிகள் கூறி அங்கிருந்து வெளியேறினோம். இன்பமாக சென்ற பயணத்தில் திருஷ்தியாக அமைந்தது அந்த நிமிடம். பெங்களூர் காவல் வாகனம் ஒன்று நின்று கொண்டிருக்க நாங்கள் வந்த வாகனம் அதை கடந்து சென்றது பாதி சென்ற நிலையில் திடீரென ஒரு காவலாளி கதவை திறந்தார். பஸ்சை கிழித்து கொண்டு சென்றது காவல் வாகனத்தின் கதவு. அது காவலாளியின் தவறு ஆனால் அவர் நாங்கள் வந்த பஸ்சின் ஓட்டுநரை கோபித்தார். வேகமாக என்னுடன் வந்த சென்னை பல்கலைகழக மாணவர்கள் இறங்கினர். அவர்கள் பேசுவது எங்களுக்கு விளங்கவில்லை. உடனே ஓட்டுநர் அவருக்கு தெரிந்த ஒருவரை போனில் அழைத்தார். அவர் விரைந்து வந்தார் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் பஸ்சிற்கு ஆன சேதாரம் ஓட்டுநரை சார்ந்துவிட்டது.

இப்படிப்பட்ட மனநிலையில் ஒரு 2 மணி நேரம் பயணித்தோம். அனைவரின் முகமும் கலை இழந்து காணப்பட்டது. அவர்களின் மனநிலையை மாற்ற பாட்டு பாடி ஆட ஆரம்பிதோம் சென்னை பல்கலைகழக மாணவர்கள் மற்றும் யாழ்ப்பான பல்கலைகழக மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்கள்., யாழ்ப்பாணப் பேராசிரியர் தேவானந்த் என அனைவரும் ஆட ஆரன்பித்தனர். அனைவரின் முகத்திலும் சிரிப்பை கண்டேன்.

மைசூர் திப்பு சுல்தான் கோட்டை...

மைசூர் பேலஸ் மிக ரம்மியமான தோற்றம். ஒரு நிமிடம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் என் நினைவுக்கு வந்தது. மன்னனின் வாழ்க்கை இன்பமானது. வாழ்ந்தால் ராஜாவாக தான் வாழ வேண்டும்.. குத்து சண்டை மைதானம்., அழகான அறைகள்., அவர்கள் பயண்படுத்திய பொருள்கள்., வாள்கள் என அனைத்து கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.. அதை சுற்றி பார்த்தவுடன்., அன்று இரவு பிருந்தாவன் கார்டன் சென்றோம். வண்ணங்களின் போட்டி., சில்லென்ற சாரல்., டான்சிங் வாட்டர் பால்ஸ். அந்த இடத்தை விட்டு வெளியேற மனமில்லை.

கோயம்பத்தூர் பயணமானோம்...

பாரதிதாசன் பல்கலைக்கழகம். அன்பான மாணவர்கள்., கருத்தரங்கு நடைபெற்றது. முற்றம் நிகழ்ச்சி தான் ஆனால் பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்களும் எங்களுடன் சேர்ந்து ஆடினார்கள்.. அன்று இரவு சென்னை பயணம். இதை கூற வார்த்தை என்னிடம் இல்லை. இதை எழுதும் இந்த நிமிடம் கூட எதையோ நாங்கள் பெரிதாக இழந்துவிட்ட மனநிலை.. இனி யாழ்ப்பாண நண்பர்களுடன் சுற்றிய நிமிடங்கள் வருமா??.. அன்று இரவு கனத்த இதயங்களுடன் பயணித்தோம். மறுநாள் வீடு திரும்ப மனமில்லை.. 1 வார நட்பு பல வருடங்கள் நட்பைப் போல கண்களில் கண்ணீர்..

யாழ்ப்பாணப் நண்பர்கள் சென்னை விட்டு விடைபெறும் நாள்.... எங்களின் மனநிலை காட்ட விருப்பமில்லை.. சோகத்தில் ஆழ்ந்துள்ள எமது நண்பர்களை மேலும் சோகத்தில் பார்க்க எமக்கு விருப்பமில்லாத காரணம் அன்று முழுவது நான் சிரித்துக்கொண்டே அவர்களுடன் கதைத்தேன்.. சென்னை விமான நிலையம் வரை சென்று அவர்களை வழியனுப்பினோம்.. உள்ளே சென்ற எனது தோழி கவி திடீரேன திரும்பி ஓடி வந்து என்னை கட்டி அனைத்தால். அப்பொழுதும் சிரித்துக்கொண்டே போயிட்டு வா டா என்றேன். " ஏண்டி நான் போறேன் என்ற வருத்தம் இல்லையா" என்று கோபித்தால்.. புன்னகையுடன் லவ் யூ டா என்றேன்.. இன்று வரையிலும் தினமும் பேஸ்புக்கில் எங்களின் நட்பு தொடர்கிறது.. என் வாழ்வில் மறக்க முடியாத பயணம்..

5 comments:

  1. வருடங்கள் பல கடந்தாலும் நிலைக்கும் இந்த உறவும்.. நினைவுகளும்..

    என் ஃப்ரண்டை போல யாரு மச்சான்...

    ReplyDelete
  2. நீ எங்க போன எங்க மச்சான்.
    என்ன எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
    Love u friends..

    ReplyDelete