மெட்ரோ ரயில் திட்டத்தால் அழியும் மூலகோத்திரம் கருவாடு மண்டி
சென்னை மூலகோத்திரத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணி நடந்து வருவதால் மூலகோத்திரம் கருவாடு மண்டி அழியும் நிலையில் உள்ளது.
சமீபத்தில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இயங்கி வரும் புதிய பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. சென்னை தங்கசாலையில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில், தங்கசாலையிலுள்ள அனைத்து மரக்கடைகளையும் அகற்றும் பணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து அவர்களின் பார்வை கருவாடு மண்டியை நோக்கி திரும்பியுள்ளது.
பக்கிம் கால்வாய் வழியாக வர்த்தகம் நடந்து வந்த காலத்தில் குஜராத், மும்பை மற்றும் ஆந்திராவில் இருந்து கருவாடுகள் வந்து இறங்கும் இடமாக அமைந்தது மூலகோத்திரம். மூலகோத்திரத்தில் இருந்து கருவாடுகள் தமிழகம் முழுவதும் ஏற்றுமதியாகி வந்தது. இதன் மூலம் மொத்த வியாபாரிகள் தமிழகம் எங்கும் வர்த்தகம் செய்து வந்தனர். நாளடைவில் சிறு வியாபாரிகள் சென்னை மக்களுக்கு விற்பனை செய்ய சில்லரை வியாபாரத்தை ஆரம்பிக்க துவங்கினர்.
தெருவில் ஆரம்பித்த வியாபாரம் 1860-ல் சங்கம் அமைத்து அவர்களே மொத்த வியாபாரத்தை செய்து வந்தனர். பக்கிம் கால்வாய் வழியாக படகில் வந்து கொண்டிருந்த கருவாடு லோடுகள் ஆந்திரா மாநில பேருந்தில் வரத் தொடங்கின. கருவாடு மண்ணிடிக்கு எதிராக லோடு வந்து இறங்கும் இடத்தை ஆந்திரா பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது. இன்றும் அதன் நினைவாக அங்கு பூங்கா அமைத்து " பழைய ஆந்திரா பேருந்து நிலைய பூங்கா" என்று பெயரிடப்பட்டது.
ஆனால் இன்று வரையில் கருவாடு கடைகள் லைசன்ஸ் இல்லாமல் நடந்து வந்துள்ளது. இந்த இடத்திற்கு மாற்று இடம் தர இயலாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பழைய கருவாடு வியாபாரிகள் தங்களது கடைகளை புதிய வியாபாரிகளிடம் விற்று விட்டனர். புதிய வியாபாரிகள் சங்கதின் கட்டளைகளை மதிக்காமல், மீறுவதாகவும், இதனால் கருவாடு மண்டி சார்பில் அரசாங்கடத்திடம் எந்த வித வாதமும் செய்ய இயலவில்லை என்று சங்கத்தின் குமாஸ்தா காஜா முகைதீன் தெரிவித்தார்.