Friday, September 16, 2011


கல்வி வளர்ச்சி காணும் அயோத்தியா குப்பம்

வீதி முழுக்க குப்பைகளும், சுற்றி சாக்கடை, சானதின் சகதியுமாக இருக்கிறது. எப்படி முன்னேறும் இப்பகுதிகள் என்றால் "அரசு தான் அக்கறை காட்ட வேண்டும்" என்கிறது பல குரல்கள். ஆனால் நாம் தான் மாற்ற வேண்டும்" என்கிறது ஒரு தனிக் குரல்.

"ேள்வி கேட்க ஆளில்லாததுதான் எல்லாவற்றிக்கும் காரணம். கல்வி அறிவு கிட்டாத இம்மக்களுக்கு அது கிடைக்குமாயின் இந்த பகுதி மட்டுமல்ல, எல்லாமே மாறிவிடும்" என்கிறார் அயோத்தியா குப்பம் மீனவ மன்ற தலைவர் சசி குமார்.

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் இம்மக்களுக்கு கவனிக்க யாருமில்லை. தந்தையின் தொழிலையே தாங்களும் செய்து வரும் பரம்பரை வழக்கம் இன்னும் மாறவில்லை. இது கல்வியால் மட்டுமே சாத்தியம்" என்றார். பெரும்பாலும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக யாரும் குழந்தைகளை பள்ளிகு அனுப்புவதில்லை. ஆனால் இந்த நிலையை தற்பொழுது மாற்றி வருகிறார் சசி குமார். இதுவரை 102 மாணவர்களுக்கு மேல் கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளிலே படிக்கவைக்கலாம் ஆனால் அவர்களுக்கு வேறு வகையான சூழலை நாடுகிறார்கள். மன்றம் சார்பில் நாங்கள் யாரிடமும் பணம் ஈட்டுவதில்லைஇவர்களின் கல்வி செலவை பல அரசாங்க உழியர்கள், பெரிய ஆட்கள் என யரையாவது சந்தித்து மணவர் பெயர், அவரின் எதிர்கால ஆசை, படிக்க விரும்பும் பள்ளி, அவரின் குடும்ப சூழ்நிலை தந்தை தொழில் நிரப்பாட்ட விண்ணபத்தை அவர்களிடம் காட்டுவோம். அவர்கள் மாணவரின் கல்வி தொகையை அந்த பள்ளிகே காசோலையை அனுப்பிவிடுவார்கள்". மாலை நெரங்களில் மணவர்களுக்கு கணினி பயிற்சியும், அவர்கள் வாசிக்க சிறிய நூலகம் அமைக்கப்பதுள்ளது.

கான்வெண்ட் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிஸ் எங்க குப்பது பசங்கல படிக்க வெக்குறது ரொம்ப  பெருமையா இருக்கு" என்று பெருமிதம் கொள்கிறார் சசி குமார்.

1 comment:

  1. இக் குப்பத்திற்க்கு செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது..உங்களின் கட்டுரை ஆக்கம் அங்குநடக்கும் சம்பவங்களை தெளிவாக புலப்படுத்தியுள்ளது...இது போன்ற ஆக்கங்களை பிரசுரியுங்கள்

    ReplyDelete