கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்...
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,மெட்ரிக் நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்து தாஸ் கூறினார்..
இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட் ரிக் நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்து தாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பெற்றோர்களும் தரம் காரணமாக தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள். கல்வி தரத்திற்க்கு ஏற்ற கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூளிக்கின்றது. பேராசிரியர் சிட்டிபாபு கமிட்டி அறிக்கயில் கூறப்படுள்ள பள்ளி கட்டிடங்களுக்கு உள்ள நில அளவை ரத்து செய்ய வேண்டும், தேசிய அளவில் பாடத்திட்டதை மாற்றி அமைக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின் படி தனியார் புத்தகங்களை வெளியிட உரிமம் வழங்க வேண்டும் இவ்வாறு பல அம்ச கோரிக்கைகளை அவர் முன்னிறுத்தி பேசினார்.
"தமிழக அரசால் பிரப்பிக்கபட்ட இரண்டு உத்தரவில் சமச்சீர் கல்வியும் ஒன்று. அதை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதாக தெரியவில்லை" என்ற பத்திரிக்கை நன்பர் கேள்விக்கு அவரது பதில்:-
சமச்சீர் கல்வியை அரசங்க பள்ளிகளே தடை செய்கிறார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு.
ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 11 தேர்வுகள் வைத்தால் தான் அந்த மாணவன் சி.பி.எஸ்.சி தேர்வுக்கு இணையாகை படிப்பான் என்ற என்னுடைய கருத்தை தமிழக அரசுக்கு முன்னிறுத்தினேன். ஆனால் அதை அரசாங்க பள்ளிகல் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்களும் சி.பி.எஸ்.சி பாட திட்டத்தையே விரும்பிகிறார்கள். அரசு சமச்சீர் பாட திட்டத்தை மாற்றி தேசிய பாட் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழக அரசு இதை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பயதிலளித்தார். மேலும் பரத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் சமாளித்ததால் பத்திரிக்கையாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
No comments:
Post a Comment